உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 13, 2022

அ நிறம் | அளவு
'போல்ட்' நிறுவனம், 'நெக்பேண்டு ஸ்டைல் இயர்போன்' ஒன்றை புதிதாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'போல்ட் ஆடியோ புரோபாஸ் கர்வ் எக்ஸ்' எனும் பெயரில் அறிமுகம் ஆகி இருக்கும் இந்த இயர்போனை, வேகமாக சார்ஜ் செய்யலாம்.
இந்த இயர்போனை 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.மேலும், இந்த இயர்போன் நீர், வியர்வை ஆகியவை உட்புகாத வகையில் IPX5 ரேட்டிங் உடன் வந்துள்ளது.
இந்த இயர்போனில் 'மைக்ரோ வூபர்' இருப்பதால் எக்ஸ்ட்ரா பாஸ் கிடைக்கும். யு.எஸ்.பி., டைப் சி போர்ட் சார்ஜிங் உடன் வந்துள்ளது, இந்த இயர்போன்.
விலை: 999 ரூபாய்.
