உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 01, 2022

அ நிறம் | அளவு
அமெரிக்காவைச் சேர்ந்த, 'போஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு சவுண்டுபாரை அறிமுகம் செய்துள்ளது. 'போஸ் ஸ்மார்ட் சவுண்டுபார் 900' எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சவுண்டுபார், உலக சந்தைகளில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளது.
இந்த சவுண்டுபார், 'டால்பி அட்மோஸ்' சப்போர்ட் உடன் வந்துள்ளது. மேலும் 'அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட்' ஆகியவற்றையும் சப்போர்ட் செய்யும். இரண்டு வண்ணங்களில் வந்துள்ளது. இது 41 அங்குல நீளமும், 2.3 அங்குல உயரமும், 4 அங்குல தடிமனும் உடையது. இந்த சவுண்டுபார், 50 அங்குலம் அல்லது அதற்கு அதிகமான அளவு கொண்ட 'டிவி'களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
விலை: 1.05 லட்சம் ரூபாய்.
