உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 08, 2022

அ நிறம் | அளவு
கப்பல் மாலுமிகளுக்கும், படகு ஓட்டிகளுக்கும் பயன்தரத் தக்க வகையிலான ஸ்மார்ட்வாட்சை, 'கார்மின்' நிறுவனம், 'கார்மின் குவாடிக்ஸ் 7 சிரீஸ் மரைன்' எனும் பெயரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த சீரிஸில், மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் ஒன்று, சூரிய ஒளியில் இயங்கும் மாடலாகும். மாலுமிகள் மற்றும் படகு ஓட்டிகளுக்கான சிறப்பு செயலி ஒன்று 'இன்பில்ட்' ஆக இணைக்கப்பட்டு, இந்த வாட்சுகள் வந்துள்ளன. இந்த செயலி வாயிலாக கடலின் ஆழம், காற்றின் வேகம், இன்ஜின் ஆர்.பி.எம்., ஆகியவற்றை அறியலாம்.
அத்துடன் ஜி.பி.எஸ்., மற்றும் ஆட்டோபைலட் என கூடுதல் வசதிகளும் இதில் உள்ளன.
விலை 54 ஆயிரம் ரூபாயில் துவங்கி, 92 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. கடலுக்குள் போகும் ஐடியா இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்.
