உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 02, 2022

அ நிறம் | அளவு
'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்றுள்ள, 'எச்.எம்.டி.ஐ., குளோபல்' நிறுவனம், இந்தியாவில், 'நோக்கியா டி 10' எனும், டேப்லெட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
உலக சந்தையில், கடந்த ஜூலையில் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது. உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டேப்லெட்டின் அதே சிறப்பம்சங்கள், இந்திய அறிமுகத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விலையும், 13 ஆயிரம் ரூபாய் வரம்புக்குள் இருப்பது இதன் சிறப்பு.
சிறப்பம்சங்கள்:
8 அங்குல எல்.சி.டி., டிஸ்ப்ளே
1280 x 800 பிக்ஸல்
8 எம்.பி., சதுர வடிவ கேமரா
2 எம்.பி., செல்பி ஸ்நாப்பர்
ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,
5,250 எம்.ஏ.எச்., பேட்டரி
10 வாட் சார்ஜிங்
விலை:
4 ஜிபி + 64 ஜி.பி., : 12,799 ரூபாய்
3 ஜிபி + 32 ஜி.பி., : 11,799 ரூபாய்
