உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 30, 2021

அ நிறம் | அளவு
'மாற்றங்களே மாறாதது' என்பது மின்னணு சாதனங்களுக்கு நன்றாகவே பொருந்துகிறது.'அமேசான்' நிறுவனத்தின், 'இரண்டாவது தலைமுறை அமேசான் எக்கோ ஷோ 8' இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
இது ஏற்கனவே அறிமுகம் ஆகியுள்ள, 'எக்கோ ஷோ 8'ன் மேம்பட்ட மாடல் ஆகும்.
குறிப்பாக, இதில் கேமரா மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 'ஆட்டோ பிரேமிங்' வசதியும் கொண்டிருக்கிறது. 'வீடியோ' அழைப்புகளின்போது இது மிகவும் வசதியாக இருக்கும்.
இரண்டு அங்குல இரு 'ஸ்டீரியோ ஸ்பீக்கர்' கொண்ட இதன் திரை, 8 அங்குல அளவு கொண்டதாகும். இதற்கு முந்தைய மாடலில், ஒரு மெகா பிக்சல் கேமரா இருந்த நிலையில், தற்போது 13 மெகா பிக்சல் கேமராவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் விலை: 13, 999 ரூபாய்.
அறிமுக சலுகையாக குறிப்பிட்ட காலத்திற்கு 11,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
