உடற்பயிற்சி செய்யலாமா, வேண்டாமா? ஆலோசனை வழங்கும் 'பிட்னஸ் பேண்டு'
உடற்பயிற்சி செய்யலாமா, வேண்டாமா? ஆலோசனை வழங்கும் 'பிட்னஸ் பேண்டு'
PUBLISHED ON : ஆக 29, 2021

'பிட்பிட்' நிறுவனம், 'பிட்பிட் சார்ஜ் 5' எனும் புதிய, 'பிட்னஸ் பேண்டு' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய பிட்னஸ் பேண்டு, இதற்கு முந்தைய மாடலான,'பிட்பிட் சார்ஜ் 4' ஐ விட 10 சதவீதம் மெலிதாக இருக்கும். ஆனாலும், முந்தைய மாடலை போலவே பேட்டரி 7 நாட்கள் தாக்குப் பிடிக்கும்.
இந்த பிட்னஸ் பேண்டில் குறிப்பிடத்தக்க அம்சம், நம் துாக்கம், இதய துடிப்பு போன்றவற்றை வைத்து, நாம் என்ன வகையிலான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம் என அதுவே தெரிவிக்கும்.
கடுமையான உடற்பயிற்சி எடுக்கலாம், அல்லது யோகா செய்தால் போதுமானது, அல்லது ஓய்வு எடுப்பது நல்லது என அதுவே நமக்கு ஆலோசனை வழங்கும்.
மேலும் இதில், இ.சி.ஜி., செயலி வசதி உள்ளது. அத்துடன் மன அழுத்தத்தை அளவிடும் வசதியும் இருக்கிறது. இந்தியாவில் இனிமேல் தான் விற்பனைக்கு வர இருக்கிறது.
விலை: 14,999 ரூபாய்.
