
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களுக்கு, சார்ஜ் ஏற்றுவது என்பது கொஞ்சம் போரடிக்கிற, சிரமமான ஒன்றுதான். இதன் விளைவாக கார்டுலெஸ் சார்ஜர்கள் வந்தன.
இப்போது அடுத்த கட்டமாக, இன்னொரு கண்டுபிடிப்பு. தற்போதுள்ள ஒயர்லெஸ் சார்ஜர்களில், சார்ஜ் பேடு மீது நமது போனை வைத்தால் சார்ஜ் ஏறும்.
ஆனால், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன் போன்றவற்றை, பேடு மீது தட்டையாக வைக்க முடியாது என்பதால், ஒயர்லெஸ் சார்ஜர் வசதியாக இல்லாமல் போய்விட்டது.
இப்போது,சார்ஜரிலிருந்து குறிப்பிட்ட துாரத்தில் நமது சாதனம் இருந்தால் போதுமானது, தானே சார்ஜ் ஏற்றிக்கொள்ளும்.
இப்படி ஒரு கண்டுபிடிப்பை ரெடி செய்துள்ளது, அமெரிக்காவைச் சேர்ந்த எனர்ஜஸ் நிறுவனம். இதன், 'வாட்டப்' எனும் பவர் டிரான்ஸ்மீட்டரை வைத்துக்கொண்டால், 15 அடி தூரத்திலிருந்து கூட எல்லா சாதனங்களுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.

