
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்பிள் நிறுவனம், இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள், ஐபேடு மினி 5, துவக்க நிலை ஐபேடு ஆகியவற்றை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. 2015 செப்டம்பரில், ஐபேடு மினி 4 அறிமுகமானது. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு, இப்போதுதான் ஐ பேடு மினி 5 அறிமுகமாக இருக்கிறது.
ஐபேடு மினி 5 உடன், துவக்க நிலை ஐபேடும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஐபேடு மினி 5ஐ பொருத்தவரை, இரண்டு கேமரா, ஹெட்போன் ஜேக் ஆகியவற்றுடன் இருக்கும் என தெரிகிறது.
இருப்பினும், சிறப்பம்சங்கள் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

