PUBLISHED ON : டிச 02, 2018

'சாம்சங் கேலக்ஸி நோட் 9, ஐபோன் டென் எஸ் மேக்ஸ்' போன்களுக்கு போட்டியாக, 'வாவேய் மேட் 20 புரோ' என்ற போனை அறிமுகப்படுத்தி உள்ளது, 'வாவேய்' நிறுவனம்.
'பேஸ் லாக், இண்டிஸ்பிளே பிங்கர் பிரின்ட் சென்சார்' உள்ளிட்ட பல வசதிகள் இருக்கு. 'அமேசான் பிரைம்' வாடிக்கையாளர்களுக்கு, டிச., 3ல் விற்பனைக்கு வருகிறது. டிச., 4ல், அமேசான் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
விலை, 69,990 ரூபாய்.
அறிமுகச் சலுகையாக சென்ஹிசெர் பி.எக்ஸ்.சி., 550 ஒயர்லெஸ் ஹெட்போனுடன் சேர்த்து, 71,990 ரூபாய்க்கு கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
* 6.39 அங்குல தொடுதிரை
* 24 + 40 மெகா பிக்சல்
* இம்.எம்.யு.ஐ., 9.0 - ஆண்ட்ராய்டு 9.0 பை
* கிரின் 980 ஆட்டோகோர் எஸ்.ஓ.சி.,
* 6 ஜி.பி., ரேம் / 128 ஜி.பி., உள்ளீட்டுத் திறன்
* 8 ஜி.பி., ரேம் / 256 ஜி.பி., உள்ளீட்டுத் திறன்
* 4200 எம்.ஏ.எச்., பேட்டரி
