உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 29, 2022

அ நிறம் | அளவு
'நத்திங் போன் 1' அறிமுகம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பை அதிலிருந்து விலகி, 'நத்திங்' எனும் நிறுவனத்தை, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு நடத்தி வருகிறார்.
முதலில் இயர்பட்சுகளை அறிமுகம் செய்த நத்திங், அடுத்தகட்டமாக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
இந்நிலையில், இந்த போன் ஜூலை 21ல் அறிமுகம் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இதன் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 41 ஆயிரம் ரூபாய் ஆகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போன் உள்ளே இருக்கும் பாகங்கள் வெளியே தெரியும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
