PUBLISHED ON : டிச 16, 2018

அ நிறம் | அளவு
அதிகாலையில், 'ஜாக்கிங்' செல்வோர், எவ்வளவு துாரம் ஓடினோம்; எவ்வளவு நேரம் ஆச்சு; எவ்வளவு கலோரிகள் குறைந்தது ஆகியவற்றை பற்றி தெரிந்துக் கொள்ள மிகவும் விரும்புவர். அவர்களுக்காகவே, 'பூமா' நிறுவனம், 1986 ஆர்.எஸ்., கம்ப்யூட்டர் ரன்னிங் ஷூவை அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த ஷூவை பட்டி பார்த்து, மீண்டும் வெளியிட்டு உள்ளது.
இந்த புதிய ஷூவில், குதிங்காலுக்கு கீழே, கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், எல்.இ.டி., இன்டிகேட்டர்ஸ், யு.எஸ்.பி., சார்ஜ் பாயின்ட், ப்ளூடூத் உட்பட பல அம்சங்கள் உள்ளன.
ப்ளூடூத் வாயிலாக, மொபைல் போனில், 'கனெக்ட்' செய்து கொள்ளலாம். 86 ஜோடி ஷூக்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை.
