PUBLISHED ON : டிச 16, 2018

அ நிறம் | அளவு
'ஆப்பிள்' நிறுவனத்தின், 'ஏர்போட்ஸ்' இயர்போனுக்கு போட்டியாக, 'ஸ்கல்கேண்டி புஷ்' என்ற, ஒயர்லெஸ் இயர்போனை, ஸ்கல்கேண்டி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இது, இந்நிறுவனத்தின் முதல், ஒயர்லெஸ் இயர்போன்.
இந்த இயர்போனில் இன்கமிங் கால்களை அட்டன்ட் பண்ணலாம்; பாடல்களை மாற்றலாம்; வால்யூமை கூட்டலாம் குறைக்கலாம். மேலும், வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆகவும் பயன்படுத்தலாம். இதன் பேட்டரி திறன், ஆப்பிள் ஏர்போட்ஸ் இயர்போனின் பேட்டரி திறனை விட அதிகம். சராசரியாக, 12 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
விலை, 9,360 ரூபாய். பயமின்றி பயன்படுத்துவதற்காக, இயர்பட்ஸ் அல்லது சார்ஜர் பாக்சை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம் என, அறிவித்துள்ளது.
