sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

பேசும் கண்ணாடி

/

பேசும் கண்ணாடி

பேசும் கண்ணாடி

பேசும் கண்ணாடி


PUBLISHED ON : டிச 16, 2018

Google News

PUBLISHED ON : டிச 16, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்ஸ் அசிஸ்டன்ட், மியூசிக், அழைப்புகளை மேற்கொள்வது என, பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன், புது கண்ணாடியை, 'பிரேம்ஸ்' என்ற பெயரில், 'போஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 'ஆடியோ' வடிவில், பாடல்கள், பிளே லிஸ்ட்கள், உரையாடல்கள் போன்றவற்றை கேட்க முடியும். ப்ளூடூத் வசதி இருப்பதால், இயர்போன் போல பயன்படுத்தலாம்.

மிகச் சிறியதாக இருக்கும் மைக்ரோபோன், பல்வேறு ஆப்ஷன்களை இயக்கும் பட்டன், கண்ணாடியின் வலதுபுறம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டன் மூலம், கூகுள் அசிஸ்டன்ட், வாய்ஸ் கால், பாடல்களை, 'ஸ்கிப்' அல்லது நிறுத்துவது போன்ற வசதிகளை செய்ய முடியும்.

இது, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிந்து, நீங்கள் பார்க்கும் விஷயத்தை, 9- ஆக்சிஸ் ஹெட் மோஷன் சென்சார் மூலம் அறிந்து கொள்ளும். பின், உங்களது, ஐ.ஓ.எஸ்., அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள, ஜி.பி.எஸ்.,சை பயன்படுத்தி, தானாக ஆடியோவை சேர்த்துக் கொள்ளும்.

அமெரிக்காவில், 2019 ஜனவரி முதல் கிடைக்கும். இதன் விலை, 14,037 ரூபாய்.

விரைவில், இந்தியாவுக்கு வரும்.






      Dinamalar
      Follow us