PUBLISHED ON : ஏப் 02, 2021

எல்.ஜி., நிறுவனம், அதன் மொபைல் போன் வணிகத்திலிருந்து வெளியேறுவது, கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. அண்மைக் காலமாகவே இது குறித்து, பல செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது, அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வணிக விற்பனை குறித்து, ஜெர்மனியின், 'போக்ஸ்வேகன் ஏ.ஜி.,' நிறுவனத்துடனும், வியட்னாமை சேர்ந்த, 'வின்குரூப் ஜே.எஸ்.சி.,' நிறுவனத்துடனும் பேச்சு நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குவான் போங் இது குறித்து பேசியிருந்தார். அப்போது அவர், மொபைல் போன் வணிகத்தை விற்பனை செய்வது குறித்த அனைத்து அம்சங்களையும் ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய நிலையில், 'போல்டபிள்' உள்ளிட்ட, 'பிரீமியம்' போன்களை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற போன்கள் தயாரிப்பிலிருந்து வெளியேறிவிடுவது என திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
