PUBLISHED ON : ஏப் 03, 2021

பிரபல, 'ஸ்கல்கேண்டி' நிறுவனம், புதிய, 'ட்ரூ ஒயர்லெஸ்' இயர்போனை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்கல்கேண்டி இண்டி ஏ.என்.சி.,' எனும் இந்த இயர்போன், நிறுவனத்தின் முதல், 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' தொழில்நுட்பத்துடன் கூடிய இயர்போனாகும்.
இதன் சிறப்பம்சங்களில் ஒன்று, 32 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் வகையிலான பேட்டரி இருப்பதாகும். ஏ.என்.சி.,யை பயன்படுத்தும் பட்சத்தில், 19 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும்.
பத்து நிமிடம் சார்ஜ் ஏற்றினாலே, இரண்டு மணி நேரம் வரை உபயோகிக்கலாம்.வியர்வை, நீர் புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 12 மி.மீ., டைனமிக் டிரைவர் கொண்டது. இந்த இயர்போனில், 'டைல் டிராக்கர் ' சப்போர்ட் இருப்பதால், 'டைல்' செயலி வாயிலாக, இயர்போன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துக் கொள்ளலாம். எங்கேயாவது வைத்து விட்டு, அதை தேடிக் களைப்படையும் அவஸ்தை இதில் இருக்காது.
விலை: 10,999 ரூபாய்.
