உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 04, 2021

அ நிறம் | அளவு
பிலிப்ஸ் நிறுவனம், இந்தியாவில், புதிய 'டிவி' மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பிலிப்ஸ் பிராண்டுக்கான உரிமத்தை பெற்றுள்ள டி.பி.வி., டெக்னாலஜி நிறுவனம், இந்த 2021ம் ஆண்டில், 10க்கும் மேற்பட்ட டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதில், பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி 8200 மற்றும் 6900 மாடல்கள், ஆண்ட்ராய்டு டிவிகளாகும். பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி 7600 மற்றும் 8200 ஆகிய மாடல் டிவிகள், எஸ்.ஏ.பி.எச்.ஐ., ஸ்மார்ட் ஓ.எஸ்., டிவிகளாகும்.
ஆண்ட்ராய்டு டிவிகளில், கூகுள் அசிஸ்டென்ட் வசதியும் இருக்கிறது. இந்த பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவிகள், 32 அங்குலத்திலிருந்து 70 அங்குலம் வரை அளவு கொண்டதாக வந்துள்ளன. டிவிகளின் விலை, 21,990 ரூபாயிலிருந்து துவங்கி, 1.50 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.
