PUBLISHED ON : ஜன 08, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரபல 'ஏஸர்' நிறுவனம், 'நுகர்வோர் மின்னணு கண்காட்சி 2023'ல், அனைவரையும் ஈர்க்கக்கூடிய, புதிய கண்டுபிடிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிறுவனம், 'ஸ்பேட்டியல்லேப்ஸ் ட்ரூகேம்' தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, கண்ணாடி எதுவும் இல்லாமல், 'கேமிங்கில் 3டி' அனுபவத்தை பெறும் வழியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொழில் நுட்பம், பல கேம்களை சப்போர்ட் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இம்மாத இறுதியில், இந்த மென்பொருளை 'ஏஸர்' நிறுவனம் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
இனி, 'லேப்டாப்'பில் கேமிங் வேறு அவதாரம் எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

