உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 16, 2021

அ நிறம் | அளவு
சமூக வலைதளமான, 'பேஸ்புக்' ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. அனேகமாக, அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் இந்த வாட்ச் அறிமுகம் ஆகும் எனக் கருதப்படுகிறது.
ஆப்பிள், கூகுள், ஹூவாவே போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக, பல்வேறு சாதனங்களை தயாரிக்கும் திட்டத்தில், பேஸ்புக் உள்ளது. இந்த முயற்சியின் முதற்கட்டமாக, ஸ்மார்ட் வாட்சை வெளியிட்டு, வெள்ளோட்டம் பார்க்க உள்ளது.
இந்த வாட்ச் குறித்து வரும் செய்திகள்:
* இன்னும் இந்த வாட்சுக்கு பெயரிடப்படவில்லை
* இந்த வாட்ச் கறுப்பு, வெள்ளை, தங்கம் என மூன்று வண்ணங்களில் வரக்கூடும்
* இரண்டு கேமரா இருக்கும்
* இந்த வாட்சிலிருந்து வீடியோ, போட்டோக்களை பேஸ்புக்குக்கு பகிரலாம்
* வீடியோவை 1,080 பிக்சலில் பதிவு செய்யலாம்
* இதய துடிப்பை அறியலாம்
* பிற பிட்னஸ் நிறுவன சேவைகளுடன் இணைப்பை ஏற்படுத்தலாம்.
