தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஆண்ட்ராய்டிலும் 'ஆப்பிள் பேஸ்டைம்'

ஆண்ட்ராய்டிலும் 'ஆப்பிள் பேஸ்டைம்'

ஆண்ட்ராய்டிலும் 'ஆப்பிள் பேஸ்டைம்'


PUBLISHED ON : ஜூன் 17, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொபைல் உலகில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய சமீபத்திய அறிவிப்புகளில் ஒன்று, 'ஆப்பிள்' நிறுவனத்தின், ஆடியோ, வீடியோ அழைப்புகளுக்கான, 'பேஸ்டைம்' செயலி இனி, 'ஆண்ட்ராய்டு' போன்களிலும் கிடைக்கும் என்பது தான்.

'பேஸ்டைம்' முதன் முதலாக, கடந்த 2010ம் ஆண்டில், 'ஐபோன் 4' உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பல அப்டேட்டுகளுடன் தொடர்ந்த, 'பேஸ்டைம்' இப்போது குறிப்பிடத்தக்க பல அப்டேட்டுகளை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு, 'பேஸ்டைம்' கிடைத்துவிட்டாலும், ஆப்பிள் போனை பயன்படுத்துபவர்கள் மட்டுமே அழைப்பு விடுக்க முடியும். அந்த வகையில் ஆப்பிள், 'பேஸ்டைம்' செயலியை தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது.

ஆப்பிள், 'பேஸ்டைம்' செயலியை, ஆண்ட்ராய்டு போன்களுக்கும் விரிவுபடுத்தியதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு என்கிறார்கள். ஒன்று, 'ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாப்ட் டீம்ஸ்' ஆகியவற்றின் போட்டியை சமாளிப்பதற்காக. மற்றொன்று, ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பிற இயங்குதளங்களை பயன்படுத்துபவர்களின் பார்வையை, ஆப்பிள் பக்கம் திருப்புவதற்காக.

ஆப்பிளின் இந்த முடிவுக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை, இனி தான் பார்க்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us