உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 18, 2021

அ நிறம் | அளவு
'நோக்கியா' பிராண்டுக்கான உரிமத்தை பெற்றிருக்கும், 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம் அடுத்ததாக, ஒரு பட்ஜெட் போனை அறிமுகம் செய்துள்ளது.
'நோக்கியா சி01 பிளஸ்' எனும் இந்த போன், 'ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்' இயங்குதளத்தை கொண்டதாகும். இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட, 'நோக்கியா சி1' போன்றே உள்ளது. இந்த போன், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
'நோக்கியா சி01 பிளஸ்' முதல்கட்டமாக, ரஷ்யாவில் அறிமுகம் ஆகியுள்ளது. மற்ற சந்தைகளுக்கு இனி அறிமுகம் ஆகும்.
சிறப்பம்சங்கள்:
* செல்பி பிளாஷ் கேமரா
* 18:9 டிஸ்பிளே
* 16 ஜி.பி., சேமிப்பகம்
* 3,000 எம்.ஏ.எச்., பேட்டரி
* 5.45 அங்குல திரை
* எப்.எம்., ரேடியோ
தோராய விலை: 6,600 ரூபாய்
