உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 20, 2021

அ நிறம் | அளவு
கூகுள் நிறுவனம் விரைவில், 'பிக்ஸல் 6' வரிசை போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில், தற்போது அதனுடன் சேர்த்து, புதிதாக, கூடுதல் சக்திமிக்க ஒயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.கூகுள் நிறுவனம், 'பிக்ஸல் ஸ்டாண்டு' எனும் பெயரில், ஒயர்லெஸ் சார்ஜரை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில், புதிய சார்ஜர், முந்தையதை விட, 10 வாட் அதிக திறன் கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.இருப்பினும், சயோமி, ஹூவாவேய், ஒன்பிளஸ் சார்ஜர்கள் அளவுக்கு கூடுதல் சக்தி கொண்டதாக இருக்காது என்றும் கருதப்படுகிறது. மேலும், முன்பு போல நிற்க வைக்கும் வகையில் இல்லாமல், படுக்கை வசத்தில் இந்த சார்ஜர் இருக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
