உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 09, 2020

அ நிறம் | அளவு
சாம்சங், அதன் புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் மாடல்களில் ஒன்றான, 'கேலக்ஸி நோட்' ஸ்மார்ட்போனுக்கு, அடுத்த ஆண்டிலிருந்து விடை கொடுத்துவிடும் என்கிறார்கள்.
கொரோனா பாதிப்பால், விலையுயர்ந்த போன்களுக்கான தேவைகள் குறைந்து வரும் நிலையில், இத்தகைய முடிவினை, சாம்சங் எடுத்துஉள்ளதாக சொல்லப்படுகிறது.
சாம்சங் பிரீமியம் போன்கள் பிரிவில், இரண்டு மாடல் வரிசைகள் புகழ்பெற்றவை. ஒன்று, கேலக்ஸி நோட். அடுத்தது, கேலக்ஸி எஸ். இந்நிலையில், பிரீமியம் பிரிவில், போல்டபிள் போன்கள் வந்துவிட்டதால், கேலக்ஸி நோட் மாடல்களுக்கு சாம்சங் விடை கொடுத்துவிடும் என்கிறார்கள்.
எழுதி முடித்துவிட்ட நோட்டை, மூடி வைத்து விடுவது வழக்கம் தானே!
