உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 20, 2022

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி எஸ் 22, கேலக்ஸி எஸ் 22 பிளஸ், கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா' ஆகிய போன்கள், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளன. இந்த மூன்று போன்களும், இந்தியாவில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8வது தலைமுறை 1சிப் கொண்டுள்ளன.
மேலும், இந்த மூன்று போன்களுக்கும் நான்கு ஓ.எஸ்., அப்டேட்டுகளும், ஐந்து ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்டுகளும் வழங்கப்படும் என, சாம்சங் அறிவித்துள்ளது.
கேலக்ஸி எஸ் 22 வகை போன்களின் விலை 73 ஆயிரம் ரூபாயில் துவங்குகிறது. எஸ் 22 பிளஸ் போன் 85 ஆயிரம் ரூபாயிலும், அல்ட்ரா மாடல் 1.10 லட்சம் ரூபாயிலும் துவங்குகிறது.
