தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பறக்க ரெடியாகும் எல்.ஜி., விங்

பறக்க ரெடியாகும் எல்.ஜி., விங்

பறக்க ரெடியாகும் எல்.ஜி., விங்


PUBLISHED ON : செப் 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்.ஜி., நிறுவனத்தின், இரட்டை டிஸ்பிளே ஸ்மார்ட் போன், 'எல்.ஜி., விங்' அக்டோபர், 5ம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ஆரம்பத்தில், செப்டம்பர், 14ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அறிமுகம் மட்டுமே செய்யப்படும் என்றும்; அக்டோபர், 5ல் தான் விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போனில், வழக்கமான ஒன்றாக இல்லாமல், ஆங்கில, 'டி' வடிவ திரைகள் இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன், சாதக பாதகங்கள் குறித்தும் பல்வேறு யூகங்கள் அடிபட்டு வருகின்றன.

இதற்கு முன் கசிந்த வீடியோவில், காரில் செல்லும்போது, இந்த போனுக்கு அழைப்பு வந்தால், மெயின் திரையில் இருக்கும் மேப் அப்படியே தொடரும். அதே சமயம் பக்கத்தில் இருக்கும் சிறிய திரையில், அழைப்பினை ஏற்க முடியும் என்ற வசதி இருப்பது காட்டப்பட்டது. மெயின் திரை, 6.8 அங்குலமும்; இரண்டாவது திரை, 4 அங்குலமும் கொண்டதாக இருக்கும் என தெரியவந்துள்ளது.விலை, 74 ஆயிரம் ரூபாய் வரை இருக்கக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us