PUBLISHED ON : ஏப் 03, 2022

பிரிட்டனை சேர்ந்த, பிரபல தொழில்நுட்ப நிறுவனமான, 'டைசன்', ஏர் பியூரிபையருடன் கூடிய ஹெட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஹெட்போனுடன், ஏர் பியூரிபையரும் சேர்ந்தே இருக்கும் வகையில், இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால், மூக்குக்கும், வாய்க்கும் சுத்தமான காற்று கிடைக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெட்போனின் காது பக்கத்தில், இரு மிகச் சிறிய மோட்டார் வாயிலாக, சுத்தமான காற்று வழங்கப்படும். மொத்தத்தில் சுத்தமான காற்று, இனிமையான ஆடியோ இரண்டும் சேர்ந்து கிடைக்கும் என்கிறது இந்நிறுவனம்.
விரைவில், இந்த ஹெட்போன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அனைத்து நாடுகளுக்கும் ஒரே சமயத்தில் வராது என்றும் தெரிவித்துள்ளது. டைசன் நிறுவனம், இந்தியாவில், கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
