உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 06, 2022

அ நிறம் | அளவு
இந்திய நிறுவனமான 'பி- டிரான்' புதிய 'கேமிங் நெக்பேண்டு' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'பி -டிரான் டேன்ஜென்ட் ஜேடு' எனும் ஒயர்லெஸ் கேமிங் நெக்பேண்டு ஒன்றை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த நெக்பேண்டு பேட்டரி, 25 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். நீர்புகாமல் இருப்பது சம்பந்தமான ஐ.பி.எக்ஸ்., 4 தரமும் பெற்றுள்ளது. மேலும், இந்த நெக்பேண்டு 'யு.எஸ்.பி., டைப் சி' சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது.
கிட்டத்தட்ட 35 கிராம் எடை கொண்ட இந்த நெக்பேண்டு, வீடியோ கேம் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், துல்லியமான ஆடியோவை வெளிப்படுத்தும்.
விலை: 999 ரூபாய்.
