உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 01, 2021

அ நிறம் | அளவு
கடந்த, 24ம் தேதியன்று, 'ஜியோபோன் நெக்ஸ்ட்' முகேஷ் அம்பானியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர், 10ம் தேதியன்று விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, 'ரிலையன்ஸ் ஜியோ' மற்றும், 'கூகுள்' நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். இந்த ஸ்மார்ட்போன் விலை, இந்தியாவில் மட்டுமின்றி; உலகளவிலும் மிகவும் குறைவானதாகும் என அம்பானி தெரிவித்துள்ளார். இருப்பினும், இன்னும் விலை எவ்வளவு என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 11
இரண்டு சிம்
வைபை. ஜி.பி.எஸ்.,
3ஜி மற்றும் 4ஜி
டச் ஸ்கிரீன்
புளுடூத் வசதி
