உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 02, 2021

அ நிறம் | அளவு
புதுடில்லியை சேர்ந்த நிறுவனமான,'போல்ட் ஆடியோ' புதிதாக ஒரு ஹெட்போனை அறிமுகம் செய்து உள்ளது. 'போல்ட் ஆடியோ புரோபாஸ் எஸ்கேப்' எனும், ஒயர்லெஸ் நெக்பேண்டு ஸ்டைல் ஹெட்போனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒருமுறை சார்ஜ் ஏற்றினால், 10 மணி நேரம் வரை இந்த ஹெட்போன் தாக்குப்பிடிக்கும் வகையில் இதன் பேட்டரி உள்ளது.
மேலும் துாசி, வியர்வை, தண்ணீர் இவை புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களை கவரும் வகையில், இரட்டை வண்ண கலவையில் அறிமுகமாகி இருக்கிறது. நீலம்- கறுப்பு; சிவப்பு-கறுப்பு என, இரட்டை வண்ணங்களுடனும்; முழுமையான கறுப்பு வண்ணத்துடனும் அறிமுகம் ஆகியுள்ளது.
இதன் எடை வெறும், 28 கிராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விலை : 999 ரூபாய்.
