உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 05, 2022

அ நிறம் | அளவு
ஜெர்மன் ஆடியோ பிராண்டான 'பெயர்டைனமிக்ஸ்', இந்தியாவில், இரண்டு புதிய 'கேமிங்' ஹெட்செட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
'எம்.எம்.எக்ஸ்., 100' மற்றும் 'எம்.எம்.எக்ஸ்., 150' என இரண்டு கேமிங் ஹெட்செட்டுகள் அறிமுகம் ஆகியுள்ளன.
இவற்றில் எம்.எம்.எக்ஸ்., 100 'அனலாக்' ஹெட்செட் ஆகும். 3.5 மி.மீ., ஜேக் பிளக் வாயிலாக இதை இணைத்து கொள்ளலாம். எம்.எம்.எக்ஸ்., 150 யு.எஸ்.பி., கனெக்ட்டர் வாயிலாக இணைத்துக் கொள்ளலாம்.
மற்றபடி, பிற ஹெட்போன்களில் இருக்கும் அடிப்படையான வசதிகள் இவற்றிலும் இடம்பெற்று உள்ளன. இந்த ஹெட்போனை பயன்படுத்தும்போது, பின்னணி மற்றும் கீபோர்டு சப்தம் உள்ளிட்டவை கேட்காது. கறுப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களில் கிடைக்கும்.
விலை:
எம்.எம்.எக்ஸ்., 100 : 11,999 ரூபாய்.
எம்.எம்.எக்ஸ்., 150 : 14,999 ரூபாய்.
