PUBLISHED ON : அக் 02, 2022

'கூகுள்' நிறுவனம், இந்தியாவில் கூகுள் டிவிஎச்.டி., உடன் கூடிய 'குரோம்காஸ்ட்' சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, சலுகை விலையில் அறிமுகம் ஆகியுள்ளது. டிவியின் எச்.டி.எம்.ஐ., போர்ட்டில் எளிதாக பொருத்தும் வகையிலும், குரல் வழியாக கட்டுப்படுத்த வசதியான ரிமோட்டுடனும் இந்த குரோம்காஸ்ட் வந்துள்ளது.
மேலும் ரிமோட்டில் 'நெட்பிளிக்ஸ், யு டியூப்' ஆகியவற்றை உடனடியாக அணுகும் வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் குழந்தைகள், பெற்றோர் பரிந்துரைப்பதை மட்டுமே பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய குரோம்காஸ்ட், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகளை அணுகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் போட்டோக்களை, குரோம்காஸ்ட் வாயிலாக டிவியில் பார்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
விலை: 4,499 ரூபாய்
