தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/கூகுளின் புதிய அறிமுகங்கள்

கூகுளின் புதிய அறிமுகங்கள்

கூகுளின் புதிய அறிமுகங்கள்


PUBLISHED ON : அக் 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூகுள் நிறுவனம் அண்மையில், நான்கு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. பிக்ஸல் 5, பிக்ஸல் 4 ஏ., 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள், நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் குரோம்காஸ்ட் வித் கூகுள் டிவி ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.

குரோம்காஸ்ட் வித் கூகுள் டிவி

கூகுள் நிறுவனம் புதிய, குரோம்காஸ்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய குரோம்காஸ்டில் பல மாற்றங்களை செய்திருக்கிறது, கூகுள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மாற்றம் என்பது ரிமோட்டுடன் வந்திருப்பது. இந்த குரோம்காஸ்ட் வித் கூகுள் டிவி சாதனத்தில், தொடுதல் மற்றும் குரல்வழி மூலமாக இயக்கும் வசதிகள் உள்ளன. கூகுள் டிவி இயங்குதளத்தில் செயல்படும் இது, 4கே எச்.டி.ஆர்., சப்போர்ட் செய்யும். மேலும் டால்பி அட்மோஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி விஷன் டிடிஎஸ் எக்ஸ்., ஆகியவற்றையும் சப்போர்ட் செய்யும்.

முதற்கட்டமாக, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. பிற நாடுகளில் இந்த ஆண்டு இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: இந்திய மதிப்பில் 3,700 ரூபாய்.

கூகுள் நெஸ்ட் ஆடியோ

கூகுளின் இந்த புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர், இசையை கேட்பதில் புதிய மேம்பாடுகளை செய்திருக்கிறது. இந்த ஸ்பீக்கர், 5 வண்ணங்களில் வந்துள்ளது.

இதில், 75மி.மீ., வூபர், 19மி.மீ., டுவீட்டர், 3 மைக்ரோபோன்கள் ஆகியவற்றுடன் வந்துள்ளது. மேலும், இதனுள் குரோம்காஸ்ட்டும் உள்ளது. இந்தியாவில் நாளை முதல் விற்பனைக்கு வருகிறது.

விலை: இந்திய மதிப்பில் 7,400 ரூபாய்

கூகுள் பிக்ஸல் 5

பிக்ஸல் போன் வரிசையில், பிக்ஸல் 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இரண்டு சிம் கொண்ட இந்த போன், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும். 128 ஜி.பி., சேமிப்புத் திறன் கொண்டிருக்கும் இந்த போனில், மைக்ரோ எஸ்.டி., கார்ட் மூலம் சேமிப்புத் திறனை அதிகரிக்கும் வாய்ப்பில்லை.

யு.எஸ்.பி., டைப் சி போர்ட் கொண்ட இந்த போன், 5ஜி மற்றும் 4ஜி இணைப்பு வசதி கொண்டுள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3 மைக்ரோபோன்கள் இதில் உள்ளன. மேலும், 4080 எம்.ஏ.எச்., பேட்டரி திறன் மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இந்த போனின் எடை, 151 கிராம்.

விலை: இந்திய மதிப்பில் 51,400 ரூபாய்.

கூகுள் பிக்ஸல் 4ஏ 5ஜி

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன், 6.2 அங்குல முழு எச்.டி., திரை கொண்டதாகும். குவால்காம் ஸ்நாப்டிராகன் 765ஜி எஸ்.ஓ.சி., இயங்கு தளத்தில் செயல்படும். 6 ஜி.பி., ரேம், 128 ஜி.பி., சேமிப்புத் திறன் கொண்டுள்ளது. 4கே துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம். ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி இல்லாதது ஒரு குறை தான். 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. 3,885 எம்.ஏ.எச்., பேட்டரி திறன் கொண்ட இந்த போனின் எடை, 168 கிராம் ஆகும். மற்றபடி பெரும்பாலும் பிக்ஸல் 4 ஏ போனில் இருப்பவையே இதிலும் இடம்பெற்றுள்ளன.

விலை: இந்திய மதிப்பில், 37,000 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us