
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒன்றில் கவனம் செலுத்தினால் இன்னொன்றை கைவிட்டுவிட வேண்டியதுதான் போலும். எல்.ஜி., நிறுவனம், ரோலபிள் டிவி அறிமுகத்தில் அதிக ஆர்வம் காட்டியதாலோ என்னவோ, தற்போது, போல்டபிள் போன் தயாரிப்பு பணிகளை தள்ளி வைத்துள்ளது.
இதற்கு காரனம், போல்டபிள் போன் தயாரிப்பில் முட்டிக்கொண்டிருப்பதை விட, 5ஜி போன் தயாரிப்பு முயற்சியில் வேகம் காட்டுவதுதான் சரியாக இருக்கும் என எல்.ஜி., கருதுவதுதான். எனவே, 5ஜி போன் அறிமுகத்துக்கு பிறகே, எல்.ஜி.,யிடமிருந்து போல்டபிள் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.

