உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 25, 2020

அ நிறம் | அளவு
ஆப்பிள் நிறுவனம், அதன், 'ஏர்பாட்ஸ் புரோ'வை தொடர்ந்து, அடுத்த ஆண்டில், 'ஏர்பாட்ஸ் புரோ லைட்'ஐ அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.'ஏர்பாட்ஸ் புரோ லைட்'ஐ பொறுத்தவரை, வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தக்கூடிய, 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதி இல்லாமல் வருகிறது. மற்றபடி, இரண்டுக்கும் வேறு எந்த வித்தியாசமும் பெரிதாக கிடையாது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கிடையாது என்பதால், விலை, 20 சதவீதம் அளவுக்கு குறையும் என்கின்றனர். இதனால், அதிகமானோர் வாங்க வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர்.ஏர்பாட்ஸ் புரோ, கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இந்தியாவில் இதன் விலை, 24 ஆயிரத்து, 900 ரூபாயாக இருந்தது. தற்போது, 20 ஆயிரத்து, 999 ரூபாயாக உள்ளது.
