உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 26, 2020

அ நிறம் | அளவு
பிரபல ஆடியோ பிராண்டான, 'ஸ்கல்கேண்டி' இந்தியாவில், புதிய ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்கல்கேண்டி ஹெஷ்' எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஹெட்போனில், 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதி இருப்பது கூடுதல் சிறப்பு.கறுப்பு, வெள்ளை என, இரு வண்ணங்களில் இந்த ஹெட்போன் வந்துள்ளது.
ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை ஆன் செய்த நிலையில், 22 மணி நேரம் வரை பேட்டரி தாக்குப் பிடிக்கும் என்கிறது, ஸ்கல்கேண்டி. மேலும், 10 நிமிடம் சார்ஜ் செய்தால், மூன்று மணி நேரம் தாக்குப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு, ஒயர்லெஸ் ஹெட்போன். விலை: 10,999 ரூபாய்
