
சீனாவைச் சேர்ந்த, 'சயோமி' நிறுவனம், '4 எக்ஸ் புரோ, 4 ஏ புரோ' ஆகிய, 'மி எல்.இ.டி., டிவி'க்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில், 4 எக்ஸ் புரோ, 55 இஞ்ச்; 4 ஏ புரோ, 43 இஞ்ச் சைஸில் வந்துள்ளன. இவற்றில், 1 ஜி.பி., ரேம், 8 ஜி.பி., உள்ளீட்டுத் திறன்; 3 எச்.டி.எம்.ஐ., போர்ட்; 3 யு.எஸ்.பி., போர்ட்; வை - பை உட்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
மி 4 எக்ஸ் புரோ 55 இஞ்ச் மாடலின் விலை, 39,999 ரூபாய்; மி 4 ஏ புரோ 43 இஞ்ச் மாடலின் விலை 22,999 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இவை, மி டாட் காம் மற்றும் பிளிப்கார்ட்டில், ஜன., 15ல், மதியம், 12:00 மணிக்கு விற்பனைக்கு வருகின்றன.
'டிவி' தவிர, 'மி சவுண்டு பார்' ஸ்பீக்கர் 4,999 ரூபாய் விலையில் ஜன., 16ல், விற்பனைக்கு வருகிறது. ஹோம் தியேட்டர் செட் அப் இல்லாத அல்லது வாங்க முடியாதவர்களுக்கு, நல்ல சாய்ஸ் இந்த சவுண்டு பார்.

