
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்மார்ட் போனில் ஒண்ணு, ரெண்டு கேமரா இருப்பது எல்லாம் பழைய டிரெண்டு. இப்போ மூணு, நாலு கேமரா வைத்த போன்கள் தான், 'மாஸ்' காட்டுது. இப்போது அடுத்த லெவலுக்கு போய் விட்டது, நோக்கியா. ஐந்து கேமராக்கள் கொண்ட, 'நோக்கியா 9 பியூர் வியூ' என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்த மாதத்திலேயே அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கசிந்த தகவல்கள் இதோ:
சிறப்பம்சங்கள்:
* 5.9 அங்குல தொடுதிரை
* 8 ஜி.பி., ரேம் / 128 ஜி.பி., உள்ளீட்டுத் திறன்
* குவால்கம் ஸ்நாப்டிராகன் 845 பிராஸசர்
* ஆண்ட்ராய்டு 9
* 4,150 எம்.ஏ.எச்., பேட்டரி

