
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமேசான் எகோ, கூகுள் ஹோம் போன்ற ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கரை, விரைவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளது, சாம்சங். ஏற்கனவே மெயின் கேலக்ஸி ஹோம் எனும் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்வதாக இருந்தது, இந்நிறுவனம்.
இந்நிலையில், அதை விட சிறியதாகவும், விலை குறைவாகவும் இருக்கும் வகையில், மினி கேலக்ஸி ஹோம் ஸ்பீக்கரை முன்னதாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கேலக்ஸி ஹோம் ஸ்பீக்கர், சாம்சங் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆன, பிக்ஸ்பை அடிப்படையில் இயங்கும். பார்ப்பதற்கு ராக்கெட் கெட்டப்பில், மூன்று கால்களுடன் இருக்கிறது, இந்த ஸ்பீக்கர். மேற்பகுதியில் கன்ட்ரோல் பட்டன்கள் உள்ளன. சப்வூபர் கிடையாது என்பது சிறிய ஏமாற்றம்தான்.

