
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிவி மார்க்கெட்டை சுருட்டு சுருட்டுன்னு, சுருட்டிக்கிட்டு இருக்கும் சாம்சங், எல்.ஜி., நிறுவனங்கள், இப்போ, டிவியையே சுருட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இனி இடத்தை அடைக்காமல் டிவியை, பாய் மாதிரி சுருட்டி வச்சிடலாம்.
இப்படி சுருட்டுற விஷயத்துல, எல்.ஜி., முந்திவிட்டது. 65 இஞ்ச் ரோலபிள் டிவியை ரெடி பண்ணிட்டாங்க. கீழே பாக்ஸ் மாதிரி இருக்கும் செட்டப்பில் இருந்து மேலே எழும்பி வருகிறது எல்.ஜி., டிவி. பார்த்து முடித்த பின், பட்டனை அழுத்தினால், கீழே இறங்கி, பெட்டிக்குள் சுருண்டு கொள்கிறது.
சாம்சங் ரோலபிள் டிவியை பொருத்தவரை, எல்.ஜி., மாதிரி மேலிருந்து கீழ் என்பது போல் இல்லாமல், பக்கவாட்டில் சுருண்டு கொள்கிறது.
உண்மையிலேயே, ரூம் போட்டு தான் யோசிக்கிறாங்க!

