உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 30, 2022

அ நிறம் | அளவு
பிரபல 'கார்மின்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'கார்மி வெனு எஸ்.க்யு., 2' சீரிஸ் ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கார்மின் வெனு எஸ்.க்யு., வாட்சின் தொடர்ச்சியாக, இந்த வாட்ச்தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய கார்மின் வெனு எஸ்.க்யு., 2வாட்ச், இரண்டு மாடல்களில் அறிமுகமாகி உள்ளது.
இதில் 'வெனு எஸ்.க்யு., 2 மியூசிக்' மாடலில், பயனர்கள் கிட்டத்தட்ட 500 பாடல்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம். 'ஸ்பாட்டிபை, அமேசான் மியூசிக்' ஆகிய செயலிகளை இந்த வாட்சில் பயன்படுத்தி, இசையை கேட்கலாம்.
விலை: வெனு எஸ்.க்யு., 2 : 27,990 ரூபாய்
வெனு எஸ்.க்யு., 2 மியூசிக் : 33,490 ரூபாய்.
