தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அரிசி பாத்திரத்தில் வைப்பது சரியா?

போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அரிசி பாத்திரத்தில் வைப்பது சரியா?

போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அரிசி பாத்திரத்தில் வைப்பது சரியா?


PUBLISHED ON : ஜன 01, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய எதிரி தண்ணீர். போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் தவித்து விடுகிறோம் நாம்.

இப்படி தண்ணீரில் விழுந்துவிட்டால் பலர் கூறும் யோசனை, அதை அரிசிக்குள் வைத்துவிடுங்கள் என்பதுதான்.

ஆனால், அப்படி செய்வதால் பெரிதாக பலன் எதுவும் கிடையாது என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு பதில் வேறு சில வசதிகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஈரமான போனை சார்ஜ் ஏற்றக்கூடாது. மின்சாரம் போனை கொன்றுவிடும்; போனை ஆப் செய்துவிட வேண்டும்.

ஈரமானதும் சில சமயம் போன் அணைந்துவிடும். அது வேலை செய்கிறதா என்பதை அறியும் ஆர்வத்தில் உடனே சார்ஜ் போட்டு பார்ப்பர்; அதுகூடாது. ஈரமான பின் போன் வேலை செய்வது தெரிந்தால் கூட உடனே சார்ஜ் செய்யக் கூடாது.

பெரும்பாலான போன்களில் 'வாட்டர் புரூப்' இருப்பதால் தண்ணீரில் விழுந்த உடன், அதை எடுத்துவிடும்போது பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. அதனால் எடுத்ததும் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுவது நல்லது.

நீர் நுட்பமான பகுதிகளை பாதிக்கும் வாய்ப்பு குறையும். கடல் நீர் எனில் போனின் பாகங்கள் அரிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.

அரிசி பாத்திரத்துக்குள் வைத்தால் மிக மெதுவாகத் தான் ஈரம் உறிஞ்சப்பட்டு காயும். அரிசி பானையில் வைத்து 48 மணி நேரம் கழித்து பார்த்தால் 13 சதவீத நீரே போனிலிருந்துவெளியே வந்துஉள்ளது. அதைவிட வெளியே காய வைத்தால் அதிக பலன் இருக்கும்.

நீரை வெளியேற்ற சிறந்த வழி வெற்றிடத்தில் சூடேற்றி நீரை ஆவியாக்குவது தான் என்கின்றனர் நிபுணர்கள். அது முறையான சேவை வழங்கும் இடங்களில் மட்டுமே சாத்தியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us