PUBLISHED ON : ஏப் 10, 2022

புதிய வடிவமைப்புடன் கூடிய, '2.1 சவுண்டுபார்' ஒன்றை, 'போர்ட்ரானிக்ஸ்' அறிமுகம் செய்துள்ளது. 'பியூர் சவுண்டு 103' எனும் பெயரில், இது அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த சவுண்டுபார், 100 வாட் அவுட்புட் தரக்கூடியதாகும். இத்துடன், ஒயர் இணைப்புடன் கூடிய சப் வூபரும் தரப்பட்டுள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் என்றாலும், வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளுக்கு இந்த சவுண்டுபார் மிகவும் கைகொடுக்கும்.
ஆப்டிக்கல், யு.எஸ்.பி., புளுடூத் என பல கனெக்டிவிட்டி வாய்ப்புகள் இதில் உள்ளன.
மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்த சவுண்டுபார் 'ஈக்குவலைசர்' வசதியுடன் வந்துள்ளது. ஆடியோ அவுட்புட்டை நம் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
அடுத்து குறிப்பிடத்தக்க விஷயம், இந்த சவுண்டுபாரை, இரண்டாக பிரித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை: 5,999 ரூபாய்.
