PUBLISHED ON : ஏப் 10, 2022

'சாம்சங்' நிறுவனம், இரண்டு சவுண்டுபார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'எச்.டபுள்.யு., க்யூ 990 பி' மற்றும் 'எச்.டபுள்.யு., எஸ் 800 பி' எனும் இரண்டு சவுண்டுபார்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
முதற்கட்டமாக, தென்கொரியாவில் இவை அறிமுகம் ஆகியுள்ளன. விரைவில் இதர சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரண்டு சவுண்டுபார்களும், 'டால்பி அட்மோஸ்' சப்போர்ட் கொண்டவையாகும். இதில் எச்.டபுள்.யு., எஸ் 800 பி சவுண்டுபார் 'சூப்பர் ஸ்லிம்' சவுண்டுபார் ஆகும். மேலும் 3.1.2 சேனல் ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கும்.
எச்.டபுள்.யு., க்யூ 990 பி சவுண்டுபார், 3டி சர்ரவுண்டு சவுண்டு, 11.1.4 சேனல் ஸ்பீக்கர் வசதி கொண்டவையாகும். வெள்ளை, கறுப்பு என இரு வண்ணங்களில் வந்துள்ளன.
தோராய விலை:
எச்.டபுள்.யு., க்யூ 990 பி : 1.17 லட்சம் ரூபாய்.
எச்.டபுள்.யு., எஸ் 800 பி : 55, 800 ரூபாய்.
