உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 10, 2022

அ நிறம் | அளவு
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று, வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்களுக்கு என்றே ஸ்பெஷலாக ஒரு படுக்கையை தயாரித்துள்ளது.
உலகில் அதிகமான வீடியோ கேம் விளையாடுபவர்களைக் கொண்ட ஜப்பானில், இந்த எலக்ட்ரிக் கேமிங் படுக்கைக்கு நல்ல வரவேற்பு.
அதுமட்டுமின்றி; இந்த வீடியோ கேமிங் பெட்டுக்கு ஏற்றவாறு மேஜை, ஷெல்ப் என உதிரி ஐயிட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதனால், படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் விளையாடலாம், துாங்கலாம், அலுவலக வேலைகளை செய்யலாம், சாப்பிடலாம்!
அத்துடன், 200 கிலோ எடை கொண்டவர்கள் கூட, இதை எளிதாக பயன்படுத்தலாம்.
விலை: 35,000 ரூபாய்.
