PUBLISHED ON : டிச 02, 2018

அ நிறம் | அளவு
'வீடியோ கேம்' விளையாடுபவர்களிடம் மாட்டிக்கொண்டு, 'கீ போர்டு' படும்பாட்டை பார்த்தால், ரத்தக் கண்ணீர் தான் வரும். அந்த கண்ணீரை துடைக்கும் வகையில், எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் கீ போர்டை, 'ஹைப்பர் எக்ஸ்' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அடி தாங்குவதற்காகவே அலாய் மெட்டலில் தயாரித்துள்ளனர்.
மேலும், கீ போர்டில், 'கீ'களுக்கு இடையில், கண்ணைக் கவரும், 'லைட்'டும் எரியும். இரவில், பளபளவென மின்னும்!
வடிவேலு, செந்தில் வகையறாக்களுக்கு அடுத்தபடியாக அதிக அடி தாங்கும் இந்த, அலாய் எப்.பி.எஸ்., ஆர்.ஜி.பி., கேமிங் கீ போர்டின் விலை, 12,900 ரூபாய்.
இரண்டு ஆண்டு, 'வாரன்டி'யும் தருகின்றனர்.
