தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/இது புதுசு - ஆரவாரம் இல்லா அறிமுகம்

இது புதுசு - ஆரவாரம் இல்லா அறிமுகம்

இது புதுசு - ஆரவாரம் இல்லா அறிமுகம்


PUBLISHED ON : பிப் 06, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்சங் நிறுவனம் புதிதாக, 'சாம்சங் கேலக்ஸி ஏ ஜீரோ டூ' எனும் ஸ்மார்ட்போனை, ஆரவாரம் எதுவும் இல்லாமல், அடக்கமாக அறிமுகம் செய்துள்ளது.இந்த போன், 6.5 அங்குல திரையுடன், 5 ஆயிரம் எம்.ஏ.எச்., பேட்டரி திறனுடனும் வந்துள்ளது.இரட்டை கேமரா, செட் அப் உடன் வந்திருக்கும் இந்த போனின் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் கொண்டதாகும். பின்பக்க கேமரா, 5 மெகாபிக்சல் கொண்டதாகும்.அத்துடன், 2 ஜி.பி., ரேம், 32 ஜி.பி. சேமிப்பகம் மற்றும், 3 ஜி.பி., ரேம், 64 ஜி.பி. சேமிப்பகம் என, இருவித தேர்வுகளுடன் வந்துள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் உள்ளது. விலை 7,300 ரூபாயில் துவங்குகிறது.

ஆங்கர் சார்ஜிங் ஸ்டாண்டு

வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது அதிகமாகிவிட்ட தற்போதைய புதிய சூழலுக்கு உதவும் வகையில், ஆங்கர் நிறுவனம், புதிதாக, '10வாட் பவர்வேவ் சார்ஜிங் ஸ்டாண்டு' ஒன்றை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இந்த ஸ்டாண்டில், நமது ஸ்மார்ட்போனை வைத்தால் போதுமானது, விரைவாக சார்ஜ் ஏறும். 'கியூஐ' அடிப்படையிலான போன்களை இதில் சார்ஜ் ஏற்றலாம். குறிப்பாக, சாம்சங் போன்களுக்கு மிகவும் ஏற்றது. மற்ற சார்ஜர்களைவிட, 30 நிமிடங்கள் குறைவாகவே ஆங்கர் எடுத்துக் கொள்ளும்.சார்ஜ் ஏறும்போது, நமது போனை பக்கவாட்டிலோ, நீள்வாக்கிலோ வேண்டிய வகையில் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால், நமது பணிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.கறுப்பு வண்ணத்தில், 18 மாத உத்தரவாதத்துடன் வந்திருக்கிறது.விலை 1,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us