தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/இது புதுசு - சாம்சங் ஹெட்போன்

இது புதுசு - சாம்சங் ஹெட்போன்

இது புதுசு - சாம்சங் ஹெட்போன்


PUBLISHED ON : பிப் 08, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்சங் நிறுவனம், 'லெவல் யு 2' எனும், 'நெக்பேண்டு' வடிவிலான, ஒயர்லெஸ் ஹெட்போனை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஹெட்போன், ஒரு முறை சார்ஜ் செய்தால், 500 மணி நேரம் வரை நிற்கும். மேலும், 18 மணி நேரம் வரை இடைவிடாமல் பாடல்களை கேட்கலாம். பேட்டரி அவ்வளவு பவர்புல்.

இந்த ஹெட்போன், 12 மிமீ., ஆடியோ டிரைவர்களைக் கொண்டது. நீர் புகாது.

நீலம் மற்றும் கறுப்பு வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது. 41.5 கிராம் எடை கொண்டது.

விலை: 1,999 ரூபாய்.

போர்ட்ரானிக்ஸ் ஆட்டோ 12

போர்ட்ரானிக்ஸ் நிறுவனம், கார் ஸ்டீரியோ உள்ளிட்ட, ஆடியோ சாதனங்களுக்கான புளுடூத் வசதிக்காக, 'போர்ட்ரானிக்ஸ் ஆட்டோ 12' எனும் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

பழைய மாடல் கார் ஸ்டீரி யோக்களில், புளுடூத் இணைப்பு வசதி இருப்பதில்லை. ஆனால், அதற்காக புதிய கார் ஸ்டீரியோ வாங்குவது அதிக செலவு பிடிக்கும் காரியமாகும்.

இதற்கு பதிலாக, இந்த புளுடூத் சாதனத்தை வாங்கி பொருத்திக் கொண்டால், பழைய கார் ஸ்டீரியோவிலேயே புளுடூத் வசதிகளை எளிதாக பெற்று விடலாம்.

விலை மிகவும் குறைவான இந்த சாதனத்தின் மூலம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை, கார் ஸ்டீரியோவுடன் புளுடூத் மூலம் இணைத்து விடலாம்.

இதனால் வாகனத்தை செலுத்தும்போது, பாடல்கள் கேட்பது, தொலைபேசி அழைப்புகளை ஏற்பது அல்லது தவிர்ப்பது என பலவற்றை எளிதாக்கி கொள்ள இயலும்.

கார் ஸ்டீரியோவில் மட்டுமின்றி; வீட்டில் உள்ள பழைய மியூசிக் சிஸ்டம்களிலும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

விலை: 589 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us