உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 24, 2022

அ நிறம் | அளவு
'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், இந்தியாவில், 160 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான, பேட்டரி வசதியுடன் கூடிய 'ஜம்போ ஒயர்லெஸ் நெக்பேண்டு' ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது.
இந்த நெக்பேண்டில், சுற்றுப்புற சூழல் சப்தங்களை கட்டுப்படுத்தி, தெளிவாக போன் அழைப்புகள் கேட்க உதவும் எ.என்.சி., வசதி இடம்பெற்றுள்ளது. வீடியோ கேம் விளையாடும்போதும் சப்தம் வெகு சிறப்பாக இருக்கும் என்கிறது, ஜெப்ரானிக்ஸ்.
ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இந்த நெக்பேண்டை இணைத்துக்கொள்ளலாம். இதை 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 15 மணி நேரம் பயன்படுத்தலாம்.
விலை: 1,399 ரூபாய்
