தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/கையை உயர்த்தினாலே போதும்

கையை உயர்த்தினாலே போதும்

கையை உயர்த்தினாலே போதும்


PUBLISHED ON : ஜூலை 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2022


Follow on Google
அ நிறம் | அளவு

அண்மையில், 'ஜெப்ரானிக்ஸ் டிரிப் ஸ்மார்ட்வாட்ச்' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 'புளுடூத் காலிங்' மற்றும் ஏராளமான 'பிட்னஸ்' வசதிகளுடன் வந்து உள்ளது. 1.7 அங்குல டயல் டிஸ்ப்ளே கொண்ட இந்த வாட்சை விழிக்க வைக்க, சாதாரணமாக கையை உயர்த்தினாலே போதுமானது.

அப்படியே, 'நோட்டிபிகேஷன்'களையும் பார்த்துக் கொள்ளலாம். இந்த வாட்ச், 'ஐ.பி.67 வாட்டர் ரெசிஸ்டென்ட் மெட்டல் பாடி' கொண்டது என்பது கூடுதல் சிறப்பு. இதில் ஆக்சிஜன், ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் இதில் 10 வகையான 'இன்பில்ட் வால்பேப்பர்'களும் உள்ளன. 100 'ஸ்போர்ட்ஸ் மோடு'கள் உள்ளன. நான்கு 'இன்பில்ட் கேம்'களும் இதில் இடம்பெற்றுள்ளன. பேட்டரி ஐந்து நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும். பலவிதமான 'ஸ்ட்ராப்' தேர்வுகளுடன், ஐந்து வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

விலை விபரம்:

சிலிகான் ஸ்ட்ராப்

அதிகபட்ச விற்பனை விலை: 6,499 ரூபாய்.

அறிமுக சலுகை விலை: 1,999 ரூபாய்.

மெட்டல் ஸ்ட்ராப்

அதிகபட்ச விற்பனை விலை: 6,999 ரூபாய்.

அறிமுக சலுகை விலை: 2,399 ரூபாய்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us