PUBLISHED ON : ஜன 23, 2022

'லாஜிடெக்' நிறுவனம், 'டச் ஸ்கிரீன் குரோம்புக்'குளில் பயன்படுத்தக்கூடிய, 'லாஜிடெக் பென்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பேனாவை, 'யுனிவர்சல் ஸ்டைலஸ் இனிஷியேட்டிவ்' கொண்ட, அனைத்து டச் ஸ்கிரீன் சாதனங்களிலும் பயன்படுத்தலாம்.
தினசரி வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும்பட்சத்தில், இந்த பேனாவின் பேட்டரி, 15 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும். அரை நொடி சார்ஜ் செய்தால், அரை மணி நேரம் பயன்படுத்தலாம். பிறருடைய லேப்டாப், டேப்லெட்டுகளிலும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பேனா, மிலிட்டரி கிரேடு தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது; இதன் எடை 15 கிராம். விலை, அமெரிக்கா மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் 4,800 ரூபாய் ஆகிறது. இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது இன்னும் அறிவிக்கப் படவில்லை.
