உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 30, 2022

அ நிறம் | அளவு
'மைக்ரோசாப்ட்' நிறுவனம், அதனுடைய 'அவுட்லுக்' செயலியின் மறுவடிவமைப்பில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து, இந்த செயலியில் கூடுதலான அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைக் காலமாக, பல செயலிகளில் மறுவடிப்பை மேற்கொண்டு, விண்டோஸ் 11 பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது, மைக்ரோசாப்ட். போட்டோஸ் , நோட்பேடு, மீடியா பிளேயர் என பல செயலிகளில் மாற்றங்களை செய்துள்ளது. தற்போது, அவுட்லுக் செயலியிலும் மறுவடிவமைப்பை மேற்கொண்டு வருகிறது.
வரும் மாதங்களில், சோதனை முயற்சியாக பயனர்களின் கருத்தை அறியும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலி விண்டோஸ் 10 மற்றும் 11 ஆகிய இரண்டிலும் செயல்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
